15 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பம்
15 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பம்
UPDATED : ஆக 03, 2026 06:24 PM
ADDED : ஆக 03, 2026 06:25 PM
கோவை:
பாரதியார் பல்கலையின் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவு, இது வரை 30 காப்புரிமைகள் மற்றும் 28 பதிப்புரிமைகள் பெற்றுள்ளது.
உயிரித்தொழில்நுட்பம், நானோ அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மருத்துவ இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. பிராந்திய தயாரிப்புகளுக்கான புவியியல் குறியீடுகள் பெறும் பணியிலும் பல்கலை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும், 15 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்து ஒப்புதலுக்காக காத்திருப்பதாக, பல்கலைக்கழக அறிவுசார் சொத்துரிமைப் பிரிவு இயக்குனர் சுமதி தெரிவித்தார்.
பதிவாளர் ராஜவேல் கூறுகையில், “கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, அவற்றை வணிகமயமாக்குவதற்கும் பல்கலை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநிலக் கவுன்சிலின் ஆதரவை கோரியுள்ளோம். புதுமையை ஊக்குவிப்பதற்காக காப்புரிமை விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தலுக்கான செலவாக ஆண்டுதோறும் ரூ.6 லட்சம் வரை பல்கலை நிதி ஒதுக்குகிறது,” என்றார்.
