sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்று சான்றிதழுக்கு 15 நாள் அவகாசம்

மாற்று சான்றிதழுக்கு 15 நாள் அவகாசம்

மாற்று சான்றிதழுக்கு 15 நாள் அவகாசம்


UPDATED : டிச 04, 2025 09:06 AM

ADDED : டிச 04, 2025 09:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2025 09:06 AM ADDED : டிச 04, 2025 09:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
''தனியார் பள்ளிகளில் மாற்று சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்,'' என கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.

கர்நாடகாவில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், அவர்களுக்கு 15 நாட்களுக்குள் மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும் என கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியது.

இது தொடர்பான சுற்றறிக்கையில், 'தனியார் பள்ளிகளில் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்கள், அரசு பள்ளியில் சேருவதற்காக மாற்று சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கின்றனர். இவர்களுக்கு 15 நாட்களுக்குள் மாற்று சான்றிதழை தனியார் பள்ளி நிர்வாகம் கட்டாயம் வழங்க வேண்டும். பள்ளி கட்டணத்தை கட்டினால் மட்டுமே மாற்று சான்றிதழ் தரப்படும் என கூறக்கூடாது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடும்.

ஒரு வேளை மாற்று சான்றிதழ் 15 நாட்களுக்குள் வழங்கவில்லை என்றால், பெற்றோர் நேரடியாக வட்டார கல்வி அதிகாரியிடம் முறையிடலாம். இந்த நடைமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us