UPDATED : மார் 08, 2025 12:00 AM
ADDED : மார் 08, 2025 09:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழக பா.ஜ., சார்பில், தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, சமக்கல்வி எங்கள் உரிமை என்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சி, சென்னையில் துவக்கப்பட்டது.
இதற்கு, இணையதளம் வாயிலாக ஆதரவு தெரிவித்து கையெழுத்திட, புதிய கல்வி என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் பா.ஜ.,வினர், நேற்று முன்தினம் முதல் வீடுகளுக்கு சென்று, மக்களை சந்தித்து, மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக, கையெழுத்து வாங்கினர். மே மாதத்திற்குள், ஒரு கோடி கையெழுத்து பெற திட்டமிடப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் இணையதளத்தில் டிஜிட்டல் முறையில், 1.51 லட்சம் பேர் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து, கையெழுத்திட்டு உள்ளனர்.