'ஜெம் போர்டலில்' 1,500 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் பதிவு
'ஜெம் போர்டலில்' 1,500 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் பதிவு
UPDATED : அக் 22, 2025 08:45 AM
ADDED : அக் 22, 2025 08:45 AM

சென்னை:
மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்களுக்கு பொருட்களை விற்பதற்கான, 'ஜெம் போர்டலில்' 1,500 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
தமிழகத்தில், 12,171, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. அந்நிறுவனங்கள், மத்திய அரசின், 'ஜெம் போர்டல்' வாயிலாக, 'டெண்டர்' கோரி, பொருட்களை வாங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 'ஜெம் போர்டலில்' பதிவு செய்யவும், தயாரிப்பு அட்ட வணையை பதிவேற்றவும் தெரிவதில்லை. இதனால் அந்நிறுவனங்களின் பொருட்களுக்கு, அரசு நிறுவனங்களுக்கு தேவை இருந்தாலும் விற்க முடியாத நிலை உள்ளது.
கடந்த, 2016 - 17ல் இருந்து கடந்த ஆண்டு வரை ஜெம் போர்டலில் பொதுத்துறை நிறுவனங்கள், 40 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளதில், தமிழகத்தின் பங்கு 5 சதவீதம் மட்டுமே உள்ளது.
இந்நிலையில், ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் எடுத்த நடவடிக்கையால், 1,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஜெம் போர்டலில் பதிவு செய்து உள்ளன.