தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/16ம் தேதிக்குள் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க ஆணை

16ம் தேதிக்குள் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க ஆணை

16ம் தேதிக்குள் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க ஆணை


UPDATED : ஆக 11, 2011 12:00 AM

ADDED : ஆக 11, 2011 12:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2011 12:00 AM ADDED : ஆக 11, 2011 12:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சமச்சீர் பாடப் புத்தகங்களில் இருந்து 41 பகுதிகளை, கருப்பு மையிட்டும், ஸ்டிக்கர் ஒட்டியும், கிழித்தும் நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பளிக் கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

சமச்சீர் கல்வி புத்தகங்களில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணிகளை மேற்பார்வையிடவும், மாணவர்களுக்கு புத்தகங்களை விரைவாக கிடைக்கச் செய்யவும், பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும், ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் சமச்சீர் பாடப்புத்தகம் கிடைத்துவிட வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. தற்போது மீதமள்ள 8 வகுப்புகளுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் உரிய நீக்கங்கள் செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்பதால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான செவ்வாய்க்கிழமை முதலே புத்தகங்களை பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

சமச்சீர் கல்வியை வரும் இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு 10 நாட்கள் கால அவகாசம் அளித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us