தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/17ல் பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

17ல் பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

17ல் பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : நவ 10, 2023 12:00 AM

ADDED : நவ 10, 2023 05:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2023 12:00 AM ADDED : நவ 10, 2023 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
70வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு சேலம், நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தில், வரும், 17ல் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடக்க உள்ளன.பேச்சுப்போட்டிக்கு, 6 முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு, கடன் சார்பற்ற கூட்டுறவு சங்கங்கள் தலைப்பிலும், 10 முதல், பிளஸ் 2 வரை படிப்போருக்கு, நவீன கூட்டுறவு தலைப்பிலும், கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு, உற்பத்தியாளர்கள் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவு தலைப்பிலும் நடக்கிறது.கட்டுரை போட்டிக்கு, 6 முதல், 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு கூட்டுறவு தயாரிப்புகள்; 10 முதல், பிளஸ் 2 வரை படிப்போருக்கு கூட்டுறவில் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு; கல்லுாரியில் படிப்போருக்கு, மலைவாழ் மக்கள் வாழ்வாதார முன்னேற்றத்தில் கூட்டுறவின் பங்கு தலைப்பிலும் நடக்கிறது.ஓவியப்போட்டிக்கு, 6 முதல், 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு மீனவர் கூட்டுறவு அல்லது கைத்தறி நெசவாளர் கூட்டுறவு அல்லது மலைவாழ் மக்கள் கூட்டுறவு தலைப்புகளில் நடக்க உள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் முதல், 3 இடங்களை பிடிப்போருக்கு, மாவட்ட அளவில் நடக்க உள்ள கூட்டுறவு வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க, படிக்கும் பள்ளி, கல்லுாரி மூலம் பெயர் விபரங்களை, icmsalem@gmail.com என்ற மின்னஞ்சல், 0427- 2240944 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்ய, சேலம் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us