sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உயிர்தொழில்நுட்ப கருத்தரங்கில் 180 ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பு

/

உயிர்தொழில்நுட்ப கருத்தரங்கில் 180 ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பு

உயிர்தொழில்நுட்ப கருத்தரங்கில் 180 ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பு

உயிர்தொழில்நுட்ப கருத்தரங்கில் 180 ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பு


UPDATED : ஜூலை 26, 2025 12:00 AM

ADDED : ஜூலை 26, 2025 10:47 AM

Google News

UPDATED : ஜூலை 26, 2025 12:00 AM ADDED : ஜூலை 26, 2025 10:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இரண்டாவது நாளாக நேற்றுநடைபெற்ற தேசிய கருத்தரங்கில் உயிர்தொழில்நுட்பவியல் தொடர்பாக 180க்கும் மேற்பட்டஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மத்திய அரசின் நிதியுதவியுடன், உயிர்தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்கால வளர்ச்சி: பொருளாதாரம், சூழல் மற்றும் வேலைவாய்ப்பு என்ற தலைப்பில் 2 நாட்கள்நடைபெற்ற கருத்தரங்கில் நேற்றுமத்திய வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி பிரகாஷ் சாரங்கி, உணவு செயலாக்கக் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றும் உயிர்தொழில்நுட்ப அணுகுமுறை' என்ற தலைப்பில் வேளாண் மற்றும் உணவுத் துறையில் உருவாகும் கழிவுகளை மதிப்புள்ள தயாரிப்புகளாக மாற்றுவதில் உயிர்த்தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, சவித்தா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் உயிர்த்தொழில்நுட்பத் துறை தலைவர் சுரேஷ் பாபு, சுற்றுச்சூழல் நச்சுநீக்கம் நோக்கான உயிர்த்தொழில்நுட்ப வழித்தடங்கள்' என்ற தலைப்பில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், பஞ்சாப் சர்தார் ஸ்வரண் சிங் தேசிய உயிரி ஆற்றல் நிறுவனத்தின் பயோகெமிக்கல் மாற்றத் துறைத் தலைவர் சச்சின் குமார், பீட்ஸ்டாக் பயன்பாடு மற்றும் பயோகாஸ் உற்பத்தியில் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில், வேளாண் கழிவுகளைப் பயோகாஸாக மாற்றும் முயற்சிகள் குறித்தும் விளக்கினர்.

இதேபோல், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தாவர உயிர்த்தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலாதேவி, அரிசியில் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்தும் நவீன மரபணு திருத்தங்கள் குறித்து உரையாற்றினார்.

இந்த கருத்தரங்கில் புனே, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்களிலும் தலா 4 அமர்வுகள் நடத்தப்பட்டன. மொத்தமாக 180க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லுாரி செயலர் யசோதாதேவி, முதல்வர் ஹாரதி, டீன் வசந்தா, துறைத்தலைவர்கள் கிருஷ்ணவேணி, நிர்மல்குமார், சுசிலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us