UPDATED : நவ 27, 2024 12:00 AM
ADDED : நவ 27, 2024 10:33 PM

குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட நாடுகளில் உள்ள மூன்று அல்லது நான்கு வயதுடைய குழந்தைகளில், நான்கில் மூன்று பகுதியினருக்கு போதுமான பராமரிப்பு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என 'லான்செட்' இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்த முதல் 1,000 நாட்களுக்கு கிடைக்கும் குழந்தை பராமரிப்புகளே, ஆரோக்கியம் உட்பட அனைத்து விதமான வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைகிறது என்று தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், சுமார் 182 மில்லியன் குழந்தைகளுக்கு அத்தகைய பராமரிப்பு கிடைப்பதில்லை என்கின்றனர்.
உயர்தர குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டங்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் வாயிலாக, குழந்தைகள் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களளுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.