தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/19ல் ’தினமலர் - உங்களால் முடியும்’

19ல் ’தினமலர் - உங்களால் முடியும்’

19ல் ’தினமலர் - உங்களால் முடியும்’


UPDATED : ஜூன் 14, 2016 12:00 AM

ADDED : ஜூன் 14, 2016 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2016 12:00 AM ADDED : ஜூன் 14, 2016 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குறித்து சந்தேகங்களை தீர்க்கும், தினமலர் நாளிதழ் நடத்தும், உங்களால் முடியும் நிகழ்ச்சி, 19ம் தேதி திருவள்ளூர் மற்றும் சென்னை, அண்ணா நகரில் நடக்கிறது.

பிளஸ் 2 முடித்து, இன்ஜி., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் மூலம், விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்யலாம்.

கவுன்சிலிங் குறித்த மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களுக்கு விடை காண, தினமலர் நாளிதழ் சார்பில், உங்களால் முடியும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

சென்னை, மதுரை, கோவை உட்பட பல நகரங்களில் நடத்தப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, வரும், 19ம் தேதி சென்னை, அண்ணா நகரிலும், திருவள்ளூரிலும் நடக்க உள்ளது.

திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள பி.ஆர்.எஸ்., திருமண மண்டபத்தில் காலை, 10:00 மணிக்கும்; அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் மாலை, 4:00 மணிக்கும், இந்நிகழ்ச்சி நடக்கிறது.

தினமலர் நாளிதழுடன் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியும் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பங்கேற்று, இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் பற்றி விளக்கம் அளிப்பார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் இல்லை.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் தொடர்பான வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படும். கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களுக்கு நேரடியாக மாணவர் மற்றும் பெற்றோர் விளக்கம் பெறலாம். சிறந்த கேள்வி கேட்கும், இரண்டு பேருக்கு தலா, ஒரு வாட்ச், ஐந்து பேருக்கு தலா, ஒரு, பென்டிரைவ் பரிசாக வழங்கப்படும்.

நிகழ்ச்சிக்கு வருவோரில், 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்ஜி., படிப்புக்கான உதவித் தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us