UPDATED : ஜூன் 18, 2026 10:38 AM
ADDED : ஜூன் 18, 2026 10:39 AM
சென்னை:
“சென்னையில், 19ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது” என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 19ல் நடத்த உள்ளன.
இந்த முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், காலை 10:00 முதல் 02:00 மணி வரை நடக்கிறது; 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதலில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ள அனைவரும் பங்கேற்கலாம். நுழைவு கட்டணம் கிடையாது.
பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
