அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி நடப்பாண்டில் ரூ.1.95 கோடி மானியம்
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி நடப்பாண்டில் ரூ.1.95 கோடி மானியம்
UPDATED : செப் 20, 2024 12:00 AM
ADDED : செப் 20, 2024 10:08 AM

ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடப்பாண்டில், ரூ.1.95 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் கற்றல் சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிதி மூலம், பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல் சூழல் உருவாக்குதல், பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பான வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு மேம்படுத்த பள்ளிகள் செலவு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல் சூழல் உருவாக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடப்பாண்டிற்கான மானியத்தில், 50 சதவீதம் முதல் தவணையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன்படி தொடக்கநிலை அளவில், 1,093 பள்ளிகளுக்கு, ஒரு கோடியே, 33 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர் தொடக்க நிலை அளவில், 189 பள்ளிகளுக்கு, 62 லட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.