தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2 மாத ஆய்வை முடித்துவிட்டு இன்று பூமிக்கு திரும்பும் விண்வெளி வீரர்கள்

2 மாத ஆய்வை முடித்துவிட்டு இன்று பூமிக்கு திரும்பும் விண்வெளி வீரர்கள்

2 மாத ஆய்வை முடித்துவிட்டு இன்று பூமிக்கு திரும்பும் விண்வெளி வீரர்கள்


UPDATED : ஆக 02, 2020 12:00 AM

ADDED : ஆக 02, 2020 07:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2020 12:00 AM ADDED : ஆக 02, 2020 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புளோரிடா:
ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா அனுப்பி வைத்த இரண்டு வீரர்கள், 2 மாத ஆராய்ச்சிகளை முடித்து இந்திய நேரப்படி இன்று இரவு பூமிக்கு திரும்புகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது. கடந்த மே 31-ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் மூலம் பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. அதே போல் அமெரிக்காவும் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த மண்ணிலிருந்து வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
க்ரூ டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த வீரர்கள் 2 மாதங்கள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஓவல் வடிவ அந்த விண்கலம் முற்றிலும் தாணியங்கி முறையில் இயங்கக் கூடியது. அது நல்ல நிலையில் செயல்படுகிறது.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியது கடினமான பணி என்றால், அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது அதை விட முக்கியமானது என நாசா அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பயண திட்டத்தில் ஸ்பேஸ் எக்ஸில் பணியாற்றும் இந்திய பொறியாளர் சிவா பரத்வாஜின் பங்கு முக்கியமானது.
தற்போது க்ரூ டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையிலிருந்து துண்டித்துக் கொண்டு பூமியை நோக்கி புறப்பட்டுள்ளது. 21 மணி நேர பயணத்திற்கு பின் இந்திய நேரப்படி ஞாயிறு இரவு 11.30 மணி அளவில் புளோரிடாவில் உள்ள பென்சகோலா நகரின் கடலில் பாராசூட் மூலம் விண்கலம் இறங்கும். இதனை நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் விஞ்ஞானிகள் டெக்சாஸின் ஹூஸ்டன் மற்றும் ஸ்பேக்ஸ் எக்ஸ் தலைமையகமான கலிபோர்னியாவின் ஹாவ்தார்னிலிருந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us