தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு


UPDATED : அக் 08, 2020 12:00 AM

ADDED : அக் 08, 2020 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2020 12:00 AM ADDED : அக் 08, 2020 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்டாக்ஹோம்: 
இந்த ஆண்டு, வேதியியலுக்கான நோபல் பரிசு, இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.
இயற்பியல்

கடந்த, 5ம் தேதி, மருத்துவத்துறைக்கும், நேற்று முன்தினம், இயற்பியல் துறைக்கும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பரிசு குழுவினர் கூறியதாவது:

ஜெர்மனியை சேர்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் டவுட்னா ஆகியோருக்கு, வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. மரபணுமரபணு செல்களை துண்டித்து மீண்டும் சேர்ப்பது குறித்த கண்டுபிடிப்புக்காக, இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட உள்ளது.
விஞ்ஞானிகள் இமானுவேல் சார்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகியோர் இணைந்து, மரபணுத் தொழில்நுட்பத்தில், &'சி.ஏ.எஸ்., - 9&' என்ற மரபணு மாற்றக் கருவியைக் கண்டுபிடித்து உள்ளனர் .இதைப் பயன்படுத்தி, விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றின், மரபணுக்களை மாற்ற முடியும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம், புற்றுநோய்க்குப் புதிய மருத்துவத்தையும், மருந்துகளையும் கண்டுபிடிக்க முடியும். நீண்டகாலமாக தீர்வு இல்லாத, நோய்களையும் தீர்க்க உதவும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us