+2 முடிவுகளை எஸ்.எம்.எஸ்.ல் அறிய நூலகத்துறை ஏற்பாடு
+2 முடிவுகளை எஸ்.எம்.எஸ்.ல் அறிய நூலகத்துறை ஏற்பாடு
UPDATED : மே 06, 2011 12:00 AM
ADDED : மே 06, 2011 01:49 PM
மே 9ம் தேதி வெளியாக உள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலமாக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வசதியை தமிழ்நாடு பொது நூலகத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்கள் தங்கள் பெயர், தேர்வு பதிவு எண், முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களை பொது நூலகத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் www.tnpubliclibraries.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு தேர்வு முடிவு பற்றிய விவரம் மே 9ம் தேதி காலை 9 மணி முதல் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
மேலும், பொது நூலக இயக்கத்தின் கீழ் செயல்படும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் கிளை நுலகங்களில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட இணையதளத்தில் 3 நாட்களுக்கு மட்டும் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.
இத்தகவலை பொது நூலக இயக்குநர் அறிவொளி தெரிவித்தார்.
