UPDATED : செப் 07, 2020 12:00 AM
ADDED : செப் 07, 2020 08:57 AM
யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால், ஒவ்வோர் ஆண்டும் தேசிய ராணுவ அகாடமி தேர்வு நடத்தப்படும். இந்தாண்டுக்கான தேர்வு, ஏப்., 19ல் நடப்பதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், போதிய பாதுகாப்பு மற்றும் சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன், இந்த தேர்வு, நேற்று நடந்தது. இந்த தேர்வை எழுத வந்த மாணவர்களுக்காக, உத்தர பிரதேச மாநிலத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவிலிருந்து, ஹரியானா மாநிலம் கல்காவுக்கு, &'மீட்டர் கேஜ்&' பாதையில் பாரம்பரிய ரயில் சேவை உள்ளது. முற்றிலும் மலைப்பாங்கான வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐந்து மாதங்களாக இந்த ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,
இந்த வழித்தடத்தில் உள்ள சோலன் என்ற இடத்திலிருந்து, சிம்லாவில் உள்ள தேர்வு மையத்துக்கு, தேசிய ராணுவ அகாடமி தேர்வு எழுத, இரண்டு மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் வசதிக்காக, சோலனிலிருந்து, சிம்லா வரையுள்ள, 47 கி.மீ., துாரத்துக்கு, நேற்று ரயில் இயக்கப்பட்டது. இந்த இரண்டு மாணவர்களையும், நேற்று காலை சோலனிலிருந்து சிம்லாவுக்கு ஏற்றி வந்த ரயில், தேர்வு முடிந்ததும், மீண்டும் சோலனுக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்காக இயக்கப்பட்டது. இதற்காக, அந்த இரண்டு மாணவர்களும், ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
