தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2 தனியார் பள்ளிகளில் விசாரணை

2 தனியார் பள்ளிகளில் விசாரணை

2 தனியார் பள்ளிகளில் விசாரணை


UPDATED : மே 31, 2021 12:00 AM

ADDED : மே 31, 2021 09:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2021 12:00 AM ADDED : மே 31, 2021 09:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இரண்டு தனியார் பள்ளிகளில் நடந்த, பாலியல் பிரச்னை தொடர்பாக, பள்ளி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை, கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியில், மாணவியருக்கு வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜகோபாலனை கைது செய்துள்ளனர். 
அதேபோல், சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யாமந்திர் பள்ளியிலும், மாணவியருக்கு, வணிகவியல் ஆசிரியர் ஆனந்த், பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, பள்ளி நிர்வாகமே முன்வந்து, விசாரணை குழு அமைத்துள்ளது. ஆசிரியர் ஆனந்த், &'சஸ்பெண்ட்&' செய்யப்பட்டார்.
இந்நிலையில், மேலும் சில பள்ளிகளில், இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ளன. அதன்படி, ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, ஷெனாய் நகரில் உள்ள ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆகியவற்றில், முதன்மை கல்வி அலுவலர் அனிதா தலைமையிலான அதிகாரிகள், விசாரணை நடத்தியுள்ளனர்.
பள்ளிகளின் மீதான புகார்களின் விபரம், அதன் உண்மை தன்மை, நிர்வாகத்தினரின் விளக்கம், புகாரின் மீது பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை போன்றவை குறித்து, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமாரிடம் அளிக்கப்பட்ட பின், அரசின் நடவடிக்கை விபரம் தெரிய வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us