UPDATED : ஆக 10, 2011 12:00 AM
ADDED : ஆக 10, 2011 05:00 PM
அ நிறம் | அளவு
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.
இவற்றில் உள்ள 2116 பி.எட். இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து ஆகஸ்ட் 20ம் தேதி கட்-ஆப் மதிப்பெண் வெளியிடப்பட உள்ளது.
கட்-ஆப் மதிப்பெண் வெளியானதும், ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் கலந்தாய்வு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
