20 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் இடமாறுதல்
20 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் இடமாறுதல்
UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM
ADDED : ஜூலை 16, 2024 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:
மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்துக்குள் இடமாறுதல் அளிப்பதற்கான கலந்தாய்வு, ஆன்லைன் மூலம், நாமக்கல்லில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். அதில், 20 பட்டதாரி ஆசிரியர்க-ளுக்கு மாறுதல் அளிக்கப்பட்டது. இவர்கள் தங்களுக்கு விருப்ப-மான பள்ளிகளை தேர்வு செய்தனர். இந்த கலந்தாய்வில், தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள், 3 பேர், ஆங்கில ஆசிரியர்கள், 2, கணித ஆசிரியர்கள், 7, அறிவியல் ஆசிரியர்கள், 8 பேர் என, மொத்தம், 20 பேருக்கு மாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டது.