தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயிலின் 20 சிறப்பம்சங்கள்

இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயிலின் 20 சிறப்பம்சங்கள்

இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயிலின் 20 சிறப்பம்சங்கள்


UPDATED : நவ 04, 2026 11:35 AM

ADDED : நவ 04, 2026 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:35 AM ADDED : நவ 04, 2026 11:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டில், அதிவேக புல்லட் ரயில் சேவையை அறிமுகப்படுத்த, என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்., எனப்படும், தேசிய அதிவேக ரயில் நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் மும்பை, ஆமதாபாதை இணைக்கும் வகையில், 508 கி.மீ., துாரத்துக்கு அமைக்கப்படுகிறது. ரயிலின் சோதனை ஓட்டங்களை 2027 மே - ஜூன் மாதத்திற்குள் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயிலின் 20 சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

* அதிகபட்ச சோதனை வேகமான 280 கி.மீ., / மணி மற்றும் இயக்க வேகமான 249 கி.மீ., / மணி என்ற அளவில் வடிவமைக்கப்பட்டது.

* 557 பயணிகள் பயணிக்கும் திறன் கொண்டது. இதில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக இடமும் அடங்கும். பார்வைக் குறைபாடுள்ள பயணிகளுக்கு உதவும் வகையில், தகவல் பலகைகளில் பிரெய்ல் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

* எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப, இரண்டு 8 பெட்டிகள் கொண்ட ரயில்களை ஒன்றாக இணைத்து 16 பெட்டிகளாக இயக்கும் வசதியும் இதில் உள்ளது.

* போதுமான கால் வைக்கும் இடவசதியுடன் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* உட்புறங்கள் முழுவதும் எல்.இ.டி., விளக்குகள்.

* பெரிய பைகள் மற்றும் சூட்கேஸ்களுக்காக, தரையில் கூடுதல் சாமான் வைக்கும் ஸ்டாண்டுகள் உள்ளன.

* பெட்டிகளுக்குள் உள்ள எல்.சி.டி., திரைகள் ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் தகவல்களைக் காண்பிக்கின்றன.

* பயணிகள் அறைகளிலும் நுழைவாயில்களிலும் பொருத்தப்பட்டுள்ள அவசரகாலத் தொடர்பு சாதனங்கள், அவசர காலங்களில் பயணிகள் ரயில் ஊழியர்களைத் தொடர்புகொள்ள அனுமதிக்கின்றன.

* ரயிலின் இரு முனைகளிலும் ஓட்டுநர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

* ரயிலில் 7 வழக்கமான பெட்டிகளும், 1 எக்ஸிகியூட்டிவ் பெட்டியும் இருக்கும்.

* வழக்கமான பெட்டிகளில் 3×2 என்ற வரிசையிலும், எக்ஸிகியூட்டிவ் பெட்டியில் 2×2 என்ற வரிசையிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

* பயணிகள் பெட்டிகளுக்கு இடையே எளிதாக நடந்து செல்ல ஏதுவாக, இணைப்புப் பாதைகள் உள்ளன.

* லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை சார்ஜ் செய்ய ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனி பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

* சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் நவீன பயோ-டைஜெஸ்டர் கழிவறைகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் பல்வேறு பிரத்யேக ஏற்பாடுகள் இடம்பெறும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us