UPDATED : மே 02, 2024 12:00 AM
ADDED : மே 02, 2024 09:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்:
எல்லப்பாளையம் பள்ளியில் தற்போது, 226 பேர் படித்து வருகின்றனர்.
அன்னூர் ஒன்றியத்தில் உள்ள துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் இந்தப் பள்ளியில் தான் அதிக மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளி தலைமையாசிரியை பவளக்கொடி கூறுகையில், இப்பள்ளியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வருகிற கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இதுவரை 20 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவ்வாறு தலைமை ஆசிரியை தெரிவித்தார்.