தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் பதிவு

2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் பதிவு

2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் பதிவு


UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM

ADDED : ஜூன் 28, 2024 07:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM ADDED : ஜூன் 28, 2024 07:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை :
மத்திய, மாநில அரசுகளின் அனைத்து விதமான கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் எண் மிகவும் அவசியமாக உள்ளது.

பள்ளி குழந்தைகள் எளிதில் ஆதார் சேவை பெறும் வகையில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்துடனும் ஆதார் சேவைகள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளி கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்து தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us