பொறியியல் கல்லுாரிகளில் விரைவில் 2,000 பேர் நியமனம்
பொறியியல் கல்லுாரிகளில் விரைவில் 2,000 பேர் நியமனம்
UPDATED : மார் 14, 2025 12:00 AM
ADDED : மார் 14, 2025 12:12 PM
பெங்களூரு:
''பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 2,000 ஆசிரியர்கள், ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, சட்டசபையில் உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
காங்., - ராகவேந்திர பசவராஜு ஹித்னால்:
கர்நாடகாவில் மொத்தம் எத்தனை பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. வரும் நாட்களில் புதிய பொறியியல் கல்லுாரிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதா? கொப்பால் தாலுகாவில் ஒரு பொறியியல் கல்லுாரி கூட இல்லை என்பது அரசுக்கு தெரியுமா? கிராமப்புற மாணவர்களின் கல்வி வசதிக்காக, எப்போது புதிய பொறியியல் கல்லுாரி இங்கு திறக்கப்படும்.
உயர்கல்வித் துறை அமைச்சர் எம்.சி.சுதாகர்: கர்நாடகாவில் பல பொறியியல் கல்லுாரிகளில், பல இடங்கள் காலியாக உள்ளன. இந்தாண்டு 2,000 ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்று பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்துள்ளார். விரைவில் இந்த காலி இடங்கள் நிரப்பப்படும்.