தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2008ம் ஆண்டில் 17,560 ஆசிரியர்கள் நியமனம்: தங்கம் தென்னரசு

2008ம் ஆண்டில் 17,560 ஆசிரியர்கள் நியமனம்: தங்கம் தென்னரசு

2008ம் ஆண்டில் 17,560 ஆசிரியர்கள் நியமனம்: தங்கம் தென்னரசு


UPDATED : நவ 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
“2008ம் ஆண்டு இறுதிக்குள் 17 ஆயிரத்து 560 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் பா.ம.க., ஆறுமுகம், அ.தி.மு.க., சண்முகவேலு, காங்கிரஸ் கோவை தங்கம் ஆகியோருக்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
கடந்த 2006-07ம் ஆண்டில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 16 ஆயிரத்து 160 பேர் நியமிக்கப்பட்டனர். 2007-08ம் ஆண்டில் 15 ஆயிரத்து 190 பேர் நியமிக்கப்பட்டனர். மொத்தம் 31 ஆயிரத்து 350 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2008-09ம் ஆண்டில் பதவி உயர்வு மற்றும் மாறுதல் பெற்றுச் செல்பவர்களால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. முதலில் 1:1 என்ற அளவில் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். இதில் 1,000 பேரை அழைத்தால் பல்வேறு காரணங்களுக்காக 500 பேர் தான் பணியில் சேருகின்றனர்.
இதனால், முதல்வர் உத்தரவின்படி 1:2 என்ற அளவில் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். 7,505 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், 1,300 பேர் அழைக்கப்பட்டு அதில் 1,030 பேர் நியமிக்கப்பட்டனர். 230 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் 1,560 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நவம்பரில் 259 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 5,440 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இதுவரை மாவட்ட அளவில் மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட் பிறப் பித்த இடைக்கால உத்தரவின்படி, மாநில அளவில் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த ஆண்டு 17 ஆயிரத்து 560 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நவ. 17ம் தேதி கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். வார இறுதியில் மீதி விவரங்கள் வெளியிடப்படும். நவம்பர் இறுதிக்குள் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us