UPDATED : டிச 29, 2009 12:00 AM
ADDED : டிச 29, 2009 02:01 PM
அ நிறம் | அளவு
திருச்சி
மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: ஆசிரியர்கள், அறம்சார்ந்த கல்வியையும், வாழ்க்கை முறைகளையும் மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.நம்நாடு, 2020ல் நிச்சயம் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இருக்கும். அதற்கு, நம் கல்வித்தரம் உயர்த்தப்பட வேண்டும். அறிவியலும், ஆன்மிகமும் இணைந்த கல்வியை மாணவர்கள் பெறவேண்டும். நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் மரம் நடவேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால், 100 கோடி மரங்கள் நம்மால் நடமுடியும். 10 லட்சம் மக்கள், 10 லட்சம் மரம் என்ற இயக்கத்தை, முனைப்புடன் அனைவரும் செயல்படுத்த முன்வரவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
பின்
அவர், முன்னாள் மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது: நாட்டில் வறுமை மற்றும் பிரச்னைகளை ஒழிக்க கல்வியே சிறந்த மருந்து. புரா திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களை முன்னேற்ற வசதி படைத்தவர்கள் முன்வர வேண்டும். நாட்டில், 7,000 புரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.நாட்டின் வளர்ச்சிக்கு உயர்கல்வி முக்கியம். உயர்கல்வி அளிக்க, நம்நாட்டில் நூற்றுக்கணக்கான பல்கலை தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டும் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆகையால், இன்னும் 10 ஆண்டில், இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இருக்கும்.தனிமனித
ஒழுக்கம் என்பது சமுதாய சூழலுக்கு முக்கிய தேவை. வரும் 2030ல் இந்தியர்கள் நிலவில் நடப்பார்கள்.அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தலா 5,000 அணுசக்தி ஆயுதங்கள் உள்ளன. அவற்றை 2,000 ஆக குறைக்க, இருநாட்டு தலைவர்களும் சமீபத்தில் கூடி பேசியுள்ளனர். இது, வரவேற்கத்தக்க ஒன்று. இவ்வாறு, அப்துல்கலாம் பதிலளித்தார்.