UPDATED : பிப் 19, 2024 12:00 AM
ADDED : பிப் 19, 2024 08:18 PM
ஊரக வளர்ச்சி துறையில், 204 கோடி ரூபாய் நிதியில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.*ஊரக வளர்ச்சி துறை வாயிலாக, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 204 கோடி ரூபாயில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 1,374 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டம் மிக்க ஜன்னல்கள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் இவை அமைந்துள்ளன*திருநெல்வேலி, திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலுார், சேலம், வேலுார், ஆகிய மாவட்டங்களில், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள், ஆறு ஊராட்சி அலுவலகங்கள், 150 அங்கன்வாடிகள், 50 ரேஷன் கடைகள் உள்ளிட்ட, 270 கட்டடங்கள், 80.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளன*பள்ளி கல்வித்துறை வாயிலாக, செங்கல்பட்டு, கடலுார், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலுார், சேலம், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 48.56 கோடி ரூபாயில், 227 வகுப்பறைகட்டடங்கள், 19 ஆய்வகங்கள்உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன.இவற்றை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெரிய சாமி, மகேஷ் மற்றும் உயர் அதிகாரி கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.