தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக திருவிழா சாதனை முயற்சி மாவட்டத்தில் 2.06 லட்சம் பேர் புத்தகம் வாசிப்பு

புத்தக திருவிழா சாதனை முயற்சி மாவட்டத்தில் 2.06 லட்சம் பேர் புத்தகம் வாசிப்பு

புத்தக திருவிழா சாதனை முயற்சி மாவட்டத்தில் 2.06 லட்சம் பேர் புத்தகம் வாசிப்பு


UPDATED : ஆக 01, 2026 01:36 PM

ADDED : ஆக 01, 2026 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2026 01:36 PM ADDED : ஆக 01, 2026 01:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில், ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், புத்தகத்திருவிழாதொடங்கியது. வரும், 11ம் தேதி வரை நடக்கிறது.

நடப்பாண்டு, 22வது ஆண்டாக புத்தக திருவிழா நடக்கிறது. இதை நினைவு கூறவும், வாசிப்பை ஊக்குவிக்கவும் உலக சாதனை நிகழ்வாக, ஈரோடு மாவட்டத்தில், 22 நிமிடம் புத்தக வாசிப்பு நிகழ்வு நேற்று நடந்தது. பள்ளி மற்றும் கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில், இந்த உன்னத நிகழ்வு அரங்கேறியது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி தலைமையில், அரசு அலுவலர்கள், பொது அமைப்பினர்புத்தகம் வாசித்தனர்.

இது குறித்து கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:


ஈரோட்டில், 22வது ஆண்டாக புத்தகத் திருவிழா துவங்கியதன் நினைவாக பள்ளிகள், கல்லுாரிகள், அனைத்து அரசு துறை நிறுவனங்கள் என, 519 இடங்களில், 2 லட்சத்து, 6,720 பங்கேற்பாளர் மூலம், 22 நிமிடம் புத்தக வாசிப்பு நடந்தது. இதை 'எலைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் ஆய்வு செய்து, உலக சாதனை சான்று வழங்கியுள்ளனர். மாணவர்கள், மக்களிடம் புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்த இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் அர்பித் ஜெயின் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.

கோபியில்...


கோபியில் ஆர்.டி.ஓ., சிந்துஜா தலைமையில், வருவாய் துறை, கோபி யூனியன், வேளாண்துறை உள்ளிட்ட பணியாளர்கள், 200 பேர், கோபி கே.எம்.எஸ்., மண்டபத்தில் புத்ககம் வாசிக்க திரண்டனர்.

இவர்களுக்கு கதை, கட்டுரை, தலைவர்களின் வரலாறு அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது. ஆர்.டி.ஓ., சிந்துஜா வெற்றி தரும் மந்திரம்; தாசில்தார் குமரேசன் உச்சியிலிருந்து தொடங்கு; கோபி பி.டி.ஓ., ராதாமணி, ஜவஹர்லால் நேரு என்ற தலைப்பிலான புத்தகத்தையும் வாசித்தனர். காலை, 9:30 மணிக்கு தொடங்கி, 9:52 மணி வரை, 22 நிமிடங்கள் நிகழ்வு நடந்தது.

பெருந்துறையில்...


பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 778 மாணவிகளும், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில், 150க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களும், மக்களும் புத்தகம் வாசிப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us