தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/22 சிறார்களுக்கு விமானத்தில் சுற்றுலா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தாராளம்

22 சிறார்களுக்கு விமானத்தில் சுற்றுலா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தாராளம்

22 சிறார்களுக்கு விமானத்தில் சுற்றுலா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தாராளம்


UPDATED : நவ 09, 2026 12:45 PM

ADDED : நவ 09, 2026 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 12:45 PM ADDED : நவ 09, 2026 12:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயபுரா:
விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஏழை மாணவர்களின் ஆசையை, தலைமை ஆசிரியர் நிறைவேற்றினார். இதற்காக தன் ஊதியத்தை செலவிட்டுள்ளார்.

விஜயபுரா மாவட்டம், சடசனா தாலுகாவின், ஹளே துாளகேடா கிராமத்தில், அரசு கன்னட தொடக்க பள்ளி உள்ளது. இதில் விட்டல் பைரகொண்டா தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். இந்த பள்ளியில் ஏழைகள், கூலி தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர்.

பள்ளி சிறார்களுக்கு, வகுப்பறையின் நான்கு சுவர்களை தாண்டி, வெளி உலகை தெரிந்து கொள்ள, வாய்ப்பளிக்க வேண்டும் என்பது, தலைமை ஆசிரியர் விட்டல் பைரகொண்டாவின் விருப்பம். இதற்காக சில மாதங்களாக, தன் ஊதியத்தை ஒதுக்கி வைத்தார். 3 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு, சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளார். விமானத்தில் செல்ல டிக்கெட்டும், முன் பதிவு செய்துள்ளார்.

சிறார்கள் நவம்பர் 13ம் தேதியன்று, சுற்றுலா புறப்படுகின்றனர். இவர்களுடன் இரண்டு ஆசிரியர்களும் செல்கின்றனர். சொல்லாபுரா, புனே வழியாக டில்லிக்கு செல்வர்.

நான்கு நாட்கள் அங்கு தங்கி, பல சுற்றுலா இடங்களுக்கு செல்கின்றனர். குதுப் மினார், ராஜ்காட், செங்கோட்டை, இந்திரா பேலஸ், இந்தியா கேட், ஆக்ராவின் தாஜ்மஹால், யமுனா நதி, மதுரா உட்பட, வரலாற்று சுற்றுலா தலங்களை பார்ப்பர்.

தலைமை ஆசிரியர் விட்டல் பைரகொண்டா கூறியதாவது:

அரசு பள்ளியில் படிக்கும் சிறார்களுக்கும், விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள் பாட புத்தகத்தில் மட்டுமே படித்துள்ள இடங்களை, நேரில் பார்க்க வேண்டும். புதிய அனுபவங்களை பெற வேண்டும் என்ற நோக்கில், சிறார்களுக்காக சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளேன். அவர்களின் அனைத்து செலவுகளையும், நானே ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த சுற்றுலா அவர்கள் புதிதாக கற்றுக்கொள்ள, உதவியாக இருக்கும். 22 சிறார்கள் சுற்றுலா செல்வர். இவர்களுக்கு தேவையான விமான டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us