தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிப்.,22ல் வனச் சீருடை பணியிடங்களுக்கான தேர்வு

பிப்.,22ல் வனச் சீருடை பணியிடங்களுக்கான தேர்வு

பிப்.,22ல் வனச் சீருடை பணியிடங்களுக்கான தேர்வு


UPDATED : பிப் 06, 2015 12:00 AM

ADDED : பிப் 06, 2015 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2015 12:00 AM ADDED : பிப் 06, 2015 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான நுழைவுச் சீட்டை வனத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என தேர்வு குழு தலைவர் இருளாண்டி தெரிவித்தார்.

மதுரையில் வனச்சீருடை பணியாளர் தேர்வுக் குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் இருளாண்டி கூறியதாவது: வனச் சீருடை பணியாளர்களுக்கான தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட மையங்களில் நடைபெறுகிறது.

இத்தேர்வுக்கு இதுவரை 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 30 சதவீதம் பெண்களுக்கும், 10 சதவீதம் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், வனத்துறை இணையதளத்தில் (www.forests.tn.nic.in) வெளியிடப்படும் தேர்வுக்கான நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்ச்சி பெற்றவர்கள் வனத்துறை, அரசு ரப்பர் தோட்டம் போன்ற இடங்களில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்தப்படுவர், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us