தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/24ம் தேதி குரூப் 2 பணிகளுக்கான 5ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு

24ம் தேதி குரூப் 2 பணிகளுக்கான 5ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு

24ம் தேதி குரூப் 2 பணிகளுக்கான 5ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு


UPDATED : டிச 19, 2014 12:00 AM

ADDED : டிச 19, 2014 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2014 12:00 AM ADDED : டிச 19, 2014 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்த அறிவிப்பு:ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு அடிப்படையில், குரூப் - 2 பதவிகளுக்கு, நேரடி நியமனத்திற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., 2012 நவம்பரில் தேர்வு நடத்தியது.

இதில், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு, இதுவரை நான்கு கட்ட கலந்தாய்வு நடந்துள்ளது. மீதமுள்ள 120 காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்ய, ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட 354 விண்ணப்பதாரர் பதிவெண் அடங்கிய பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இதில், சிறப்பு பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு; 26ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. மற்றவர்களுக்கு 26ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு; 27ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை, தனித்தனியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பங்கேற்காதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது.

பட்டியலில் இடம் பெற்றவர்கள், குறிப்பிட்ட நாட்களில், எண்.3, பிரேசர் பால சாலை, சென்னை - 3ல் உள்ள, தேர்வாணைய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us