2.5 லட்சம் ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் தயார்
2.5 லட்சம் ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் தயார்
UPDATED : டிச 14, 2020 12:00 AM
ADDED : டிச 14, 2020 10:33 PM
அ நிறம் | அளவு
சென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றும், 2.5 லட்சம் ஆசிரியர்களுக்கு, ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி துவங்கியுள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகளை நவீனப்படுத்தும் பணி நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், 2.5 லட்சம் ஆசிரியர்களுக்கும், ஸ்மார்ட் அடையாள அட்டைகள் வழங்கும் பணி துவங்கியுள்ளது.
பள்ளி கல்வி இயக்குனரகத்தில் இருந்து, 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அடையாள அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. அடையாள அட்டைகளை ஒரு வாரத்திற்குள் ஆசிரியர்களுக்கு வழங்கி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
