2,553 டாக்டர்களுக்கு வேலை தேர்வு வாரியம் அறிவிப்பு
2,553 டாக்டர்களுக்கு வேலை தேர்வு வாரியம் அறிவிப்பு
UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 05:17 PM
சென்னை:
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 பொது மருத்துவர் பணியிடங்களுக்கு ஏப்., 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர் கள், நர்ஸ்கள், மருந்தாளுனர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், 2,553 பொது டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, எம்.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.இந்த பணியிடங்களுக்கு, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏப்., 24 முதல் மே மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம், வயது வரம்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விபரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.இப்பணியிடங்களில் சேருபவர்களுக்கு குறைந்தபட்சம், 56,100 ரூபாய் முதல் 1,77,500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன், 1,021 உதவி டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்ட போது, 25,000த்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.