sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/3ல் 2 பங்கு நர்ஸ் பணியிடங்கள் காலி நிரப்ப அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

3ல் 2 பங்கு நர்ஸ் பணியிடங்கள் காலி நிரப்ப அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

3ல் 2 பங்கு நர்ஸ் பணியிடங்கள் காலி நிரப்ப அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை


UPDATED : டிச 02, 2025 07:51 AM

ADDED : டிச 02, 2025 07:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2025 07:51 AM ADDED : டிச 02, 2025 07:53 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
அரசு டாக்டர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பழைய அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் 3ல் 2 பங்கு நர்ஸ்கள் காலி யிடம் உள்ளதையும் நிரப்ப வேண்டும்.

இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15 ஆண்டுகளுக்கு மேலாக டாக்டர்கள் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை.

சமீபத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையில் பணியாற்றும் முதுநிலை படிப்பு முடித்த டாக்டர்கள் உட்பட 3000 பேர் காலிப்பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர்.

இது மருத்துவ வர லாற்றில் சந்தோஷமான விஷயம் தான். அதே நேரத்தில் பழைய அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் பற்றாக்குறையாக உள்ள நர்ஸ் பணியிடங்களையும் நிரப்பினால் தான் நோயாளி களுக்கான மருத்துவ சேவை நிறைவடையும்.

முன்பிருந்த 'மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா' (எம்.சி.ஐ.,) அமைப் பானது, டாக்டர்களின் எண்ணிக்கை சரியாக இருப்பதைத் தான் கண்காணித்தது. 2005க்கு பின் நர்ஸ்களின் எண்ணிக்கையும் போதுமான அளவில் இருக்க வேண்டும் என எம்.சி.ஐ., அழுத்தம் கொடுத்தது.

இதனால் 2005 முதல் சமீபத்தில் துவங்கப்பட்ட புதிய அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைகள் வரை நர்ஸ்கள் தேவையான எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டனர்.

2004க்கு முன் ஆரம்பித்த சென்னை ராஜிவ் காந்தி, ஸ்டான்லி, மதுரை, திருச்சி, சேலம், கோவை, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் நர்ஸ்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு மட்டும் நிரப்பப் பட்டுள்ளது. இதை 'மாநில நர்சிங் கவுன்சிலோ', எம்.சி.ஐ.,யோ கேட்கவில்லை.

எனவே 10க்கும் மேற்பட்ட பழைய மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் தற்போது வரை நர்ஸ்கள் பற்றாக் குறையாக உள்ளனர்.

100 நர்ஸ்கள் இருக்க வேண்டிய இடத்தில் 30 நர்ஸ்கள் இருப்பதால் தான் சிகிச்சை சரியில்லை என்று நோயாளிகள் மொத்தமாக அரசு மருத்துவமனைகளைப் பற்றி குறைசொல்கின்றனர். இதை சிகிச்சையின் குறை பாடாக சொல்ல முடியாது. மருத்துவ சிகிச்சைக்கான கவனிப்பில் ஏற்பட்ட சுணக்கமாக தான் பார்க்க வேண்டும்.

நர்ஸ்களுக்கான காலிப்பணியிடத்தை அரசு நிரப்பினால் நோயாளிகளும் அரசு மருத்துவமனை சிகிச்சையைப் பற்றி குறைசொல்ல மாட்டார்கள் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us