தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/3 இன்ஜி., கல்லுாரிகளில் இருந்து ரூ.1.37 கோடி ஈ.டி., பறிமுதல்

3 இன்ஜி., கல்லுாரிகளில் இருந்து ரூ.1.37 கோடி ஈ.டி., பறிமுதல்

3 இன்ஜி., கல்லுாரிகளில் இருந்து ரூ.1.37 கோடி ஈ.டி., பறிமுதல்


UPDATED : ஜூலை 01, 2025 12:00 AM

ADDED : ஜூலை 01, 2025 01:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2025 12:00 AM ADDED : ஜூலை 01, 2025 01:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய சீட் முடக்கி வைத்த வழக்கில், மூன்று இன்ஜினியரிங் கல்லுாரிகளில் இருந்து 1.37 கோடி ரூபாயை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

சி.இ.டி., எனும் பொது நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சீட் கிடைக்கவிடாமல், சீட்டை சட்டவிரோதமாக முடக்கி வைத்து, தலா 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில், கர்நாடக தேர்வு ஆணைய ஊழியர் ஹர்ஷா, 42, உட்பட 10 பேர் கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது பற்றி தெரிந்ததால், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. 25ல் பெங்களூரில் 17 கல்லுாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்ஜினியரிங் சீட் முடக்கி வைக்கப்பட்ட வழக்கில் கடந்த 25, 26ம் தேதிகளில் பெங்களூரின் 17 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சோதனை நடத்தப்பட்டது. பி.எம்.எஸ்., ஆகாஷ் - நியூ ஹொரிசன் ஆகிய மூன்று கல்லுாரிகளில் இருந்து கணக்கில் வராத 1.37 கோடி ரூபாய் ரொக்கம், ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us