UPDATED : ஆக 20, 2025 12:00 AM
ADDED : ஆக 20, 2025 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்:
கொடைக்கானலில் ஆக. 30,31ல் 38வது மாநில யோகாசன போட்டி நடக்கிறது என தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகி ராமலிங்கம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தனக்கன்குளம் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. 38 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாநில யோகாசன போட்டிகள் கொடைக்கானல் செண்பகனுார் இக்ரோ இன்டர்நேஷனல் பள்ளியில் நடத்த முடிவானது. தனிப்பட்ட முறையில் வருபவர்களை அனுமதிப்பது இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மைசூருவில் நடக்கும் 50வது தேசிய போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். விபரங்களுக்கு 93441 18764ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.