தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜீவன் ரக் ஷா பதக்கத்திற்கு தமிழர் உட்பட 30 பேர் தேர்வு

ஜீவன் ரக் ஷா பதக்கத்திற்கு தமிழர் உட்பட 30 பேர் தேர்வு

ஜீவன் ரக் ஷா பதக்கத்திற்கு தமிழர் உட்பட 30 பேர் தேர்வு


UPDATED : ஜன 26, 2026 09:05 PM

ADDED : ஜன 26, 2026 09:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2026 09:05 PM ADDED : ஜன 26, 2026 09:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
வீரதீர செயல்களில் ஈடுபட்டு மனித உயிர்களை காப்பாற்றுவோரின் மெச்சத்தக்க செயல்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஜீவன் ரக் ஷா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 30 பேருக்கு ஜீவன் ரக் ஷா பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மனித உயிர்களை காப்பாற்றும் நபர்களின் செயல்களை அங்கீகரிக்கும் வகையில் சர்வோத்தம் ஜீவன் ரக் ஷா பதக்கம், உத்தம் ஜீவன் ரக் ஷா பதக்கம், ஜீவன் ரக் ஷா பதக்கம் என மூன்று பிரிவுகளில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 2025ம் ஆண்டுக்கான விருது, 30 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வோத்தம் ஜீவன் ரக் ஷா பதக்கம் ஆறு பேருக்கும், உத்தம் ஜீவன் ரக் ஷா பதக்கம் ஆறு பேருக்கும், ஜீவன் ரக் ஷா பதக்கம் 18 பேருக்கும் வழங்கப்பட உள்ளது.

இதில், ஆறு பேருக்கு இறந்த பின் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பி.எஸ்.கவுரி சங்கர் ராஜா என்பவருக்கு, மரணத்திற்கு பிந்தைய விருதாக, சர்வோத்தம் ஜீவன் ரக் ஷா பதக்கம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us