தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு

3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு

3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு


UPDATED : அக் 06, 2026 01:09 PM

ADDED : அக் 06, 2026 01:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 01:09 PM ADDED : அக் 06, 2026 01:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
தேன்கனிக்கோட்டை அருகே, இரும்புகால மற்றும் பெருங்கற்கால தொல்லியல் மரபை வெளிப்படுத்தும், 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டன.

சேலம் பெரியார் பல்கலை தொழில்முறை பயிற்சி மற்றும் முதுகலை ஆய்வுக்காக, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை முதுகலை மாணவர்கள், வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியேவுகாடு பகுதியில், தென்பெண்ணை ஆற்றின் தெற்கு கரையை ஒட்டிய வேடன்கல் என்ற பெரிய பாறையில், 3,000 ஆண்டுகள் பழமையான அரிதான பாறை ஓவியங்களையும், பெருங்கற்கால கல்திட்டைகளையும் கண்டெடுத்துள்ளனர்.

பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:


முதல் தொகுப்பில் அதிகம் உள்ள மனித உருவங்கள், கைகோத்து நடனமாடுவது, ஒரு சடங்குடன் தொடர்புடையதாக இருக்கலாம். இரண்டாவது தொகுப்பில், எளிய மனிதர்களின் உருவங்கள் கோடு போலவும், குச்சி போலவும் வரையப்பட்டுள்ளன.

மூன்றாவது தொகுப்பில், ஓவியங்களின் வலதுபுறத்தில் வடிவியல் வரைவுகளும், வடிவமற்ற குறியீடுகளும், குச்சி போன்ற மனித உருவமும், அதற்கு மேல் பகுதியில் மனித உருவங்கள் கைகளை மேல்நோக்கி நீட்டியவாறும் வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவிய தொகுப்புகளில், பெருங்கற்கால நினைவுச் சின்னங்களுடன் தொர்புடைய தொல்லியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றை புரிந்து கொள்ள முடியும். இக்கண்டுபிடிப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் இரும்புகால மற்றும் பெருங்கற்கால தொல்லியல் மரபை வெளிப்படுத்தும் சான்றாக அமைந்துள்ளன.

இவ்வாறு, அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us