sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

3274 அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு ஜூலை 27-ல் எழுத்துத் தேர்வு

/

3274 அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு ஜூலை 27-ல் எழுத்துத் தேர்வு

3274 அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு ஜூலை 27-ல் எழுத்துத் தேர்வு

3274 அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு ஜூலை 27-ல் எழுத்துத் தேர்வு


UPDATED : ஜூலை 22, 2025 12:00 AM

ADDED : ஜூலை 22, 2025 08:35 AM

Google News

UPDATED : ஜூலை 22, 2025 12:00 AM ADDED : ஜூலை 22, 2025 08:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 274 ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஜூலை 27ல் எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 8 கோட்டங்கள் உள்ளன. இவற்றில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடங்களில் இயக்கப்படுகின்றன. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் இல்லை. தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு நியமனம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது 3274 ஓட்டுநர், நடத்துநர் (டி.சி.சி.,) பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் கடந்த மார்ச்சில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம்- 756, சேலம்- 486, கோவை- 344, மதுரை- 322, திருநெல்வேலி- 362 ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்ப தேதி ஏப்.,21ல் முடிவடைந்தது. ஏப்.,26 வரை விண்ணப்பத்தை திருத்த அவகாசம் அளிக்கப்பட்டது. இறுதியில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஜூலை 27ல் எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. வினாத்தாளை கடந்த முறை போலவே அண்ணா பல்கலை தயாரித்துள்ளது. இத்தேர்வு சென்னை அண்ணா பல்கலை வளாகம் உட்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் நடக்கிறது.

அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ஜூலை 21 முதல் தேர்வர்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு முடிந்த பின், செய்முறைத் தேர்வு நடைபெறும் என்றனர்.






      Dinamalar
      Follow us