பொது பணியிட மாறுதல் செய்யாமல் நேர்மையான நிர்வாகம் எப்படி உருவாகும்? பட்டய பொறியாளர்கள் சங்கம் கேள்வி
பொது பணியிட மாறுதல் செய்யாமல் நேர்மையான நிர்வாகம் எப்படி உருவாகும்? பட்டய பொறியாளர்கள் சங்கம் கேள்வி
UPDATED : ஜூன் 25, 2026 02:41 PM
ADDED : ஜூன் 25, 2026 02:43 PM
விருதுநகர்:
“தமிழகத்தில் பொறியாளர்களை பொது பணியிட மாறுதல் செய்யாமல் எப்படி நேர்மையான நிர்வாகத்தை கொடுக்க முடியும்,” என நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதன் மாநிலப் பொதுச்செயலாளர் மாரிமுத்து அறிக்கை:
தமிழக அரசு சார்பில் பல்வேறு துறைகளில் அதிகாரிகளை பணியிட மாறுதல் வழங்கியதாக செய்திகள் வருகிறது.
நெடுஞ்சாலைத் துறையில் நேர்மையாக பொது பணியிட மாறுதல் நடைபெறும் என சங்க நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் தற்போது விருப்ப மாறுதல் மட்டும் கேட்டு பொறியாளர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல ஆண்டுகளாக ஒரே மாவட்டத்திற்குள் மாறி மாறி பணியிடத்தை மாற்றி கொண்டும் அருகே இருக்கும் மாவட்டத்திற்கும் மாறி கொண்டும் வசதியாக இருக்கும் பொறியாளர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பொதுபணியிட மாறுதல் நடக்கும் என எதிர்பார்த்த பொறியாளர்கள் வேதனையை வெளியே சொல்லமுடியமால் கடுமையான மன உளைச்சலோடு உள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பொது பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பாதிக்கப்படும் பொறியாளர்கள் போராடுவதை தவிற வேறு வழியில்லை.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
