UPDATED : ஜூன் 23, 2026 08:31 PM
ADDED : ஜூன் 23, 2026 08:51 PM
சென்னை:
சென்னையில் நடந்த டபிள்யூ.பி.யூ., கோவா ஓபன் ஹவுஸ் நிகழ்வில் வருங்கால மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். கணிக்க முடியாத இந்த உலகில் உயர்கல்வியின் எதிர்காலம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
டபிள்யூ.பி.யூ., கோவா பல்கலைக்கழகத்தில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் பி.டெக்., படிப்பும், மேலாண்மை ஆய்வுகள் பிரிவில் பி.எம்.எஸ்.,-ஹானர்ஸ் படிப்பும் வழங்கப்படுகிறது.
மேலும், ஒருங்கிணைந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் தகவல் தொடர்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் பி.டெஸ்., படிப்புகளையும், உளவியல் பிரிவில் பி.எஸ்சி.,-ஹானர்ஸ் படிப்பையும் இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. வேலைவாய்ப்பின் எதிர்காலம் குறித்து மாணவர்களும், பெற்றோர்களும் தெளிவைத் தேடும், இந்த விவாதங்கள் மிக முக்கியமான வழிகாட்டுதலாக அமைந்தன.
இது குறித்து, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வால்டர் லீல் பேசுகையில், ''டபிள்யூ.பி.யூ., கோவா ஒரு குறிப்பிட்ட துறையின் எல்லைகளைத் தாண்டிய 'பல்துறை ஒருங்கிணைப்பு' அணுகுமுறையின் அடிப்படையில் நிறுவப்பட்டு வருகிறது. ஆழ்ந்த கற்றல், செயல்வழிக் கற்றல் மற்றும் தொழில் துறை உடனான ஒருங்கிணைப்பு மூலம் வாழ்நாள் முழுவதும் கற்கும் திறனை மாணவர்களிடம் வளர்ப்பதே இதன் நோக்கம். அத்துடன், தனியார் மற்றும் பொதுத் துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகளையும் இது உருவாக்குகிறது'', என்றார்.
தொடர்ந்து, டபிள்யூ.பி.யூ., கோவாவின் இணைத் துணைவேந்தரான டாக்டர் ஆசிஷ் பரத்வாஜ் பேசுகையில், ''மாணவர்களை அவர்களின் முதல் வேலைக்குத் தயார்படுத்துவது மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குப் போதுமானது அல்ல. எதிர்காலம் என்பது வெறும் குறிப்பிட்ட துறையின் நிபுணர்களுக்கு மட்டும் உரியது அல்ல. தொடர்ந்து கற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் பாரம்பரிய பிரிவுகளுக்குள் அடங்காத சவால்களுக்குப் பதிலளிக்கக்கூடிய நபர்களுக்கே எதிர்காலம் சொந்தமானது'', என்றார்.
