தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/37 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கவுன்சிலிங்

37 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கவுன்சிலிங்

37 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கவுன்சிலிங்


UPDATED : செப் 24, 2011 12:00 AM

ADDED : செப் 24, 2011 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2011 12:00 AM ADDED : செப் 24, 2011 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்களில், 15 சதவீதத்தை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கும் நடைமுறை உள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு தரப்பட்ட இடங்களில் நிரம்பாமல், 37 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு 5 இடங்களும், ஸ்டான்லி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் ஆகிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 3 இடங்களும் திரும்ப கிடைத்துள்ளன.

இந்த இடங்களுக்கான எம்.பி.பி.எஸ்., இறுதிக்கட்ட கவுன்சிலிங், சென்னை, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி கலையரங்கில், இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. இக்கவுன்சிலிங்கில் பங்கேற்க, கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில், பிரிவு வாரியாக மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடக்கும்
கவுன்சிலிங் அட்டவணை, www.thhealth.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்க பெறாதோர், இணையதளம் மூலம், தங்களுக்கான கவுன்சிலிங் தேதியை அறியலாம்.

தமிழகத்தில் உள்ள, 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு போக, மீதம் 1,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பொது கவுன்சிலிங் மூலம் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us