எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு இந்தாண்டு அரசுக்கு 371 சீட்: தனியார் கல்லுாரிகளில் 240 இடங்கள் பெறப்படும்
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு இந்தாண்டு அரசுக்கு 371 சீட்: தனியார் கல்லுாரிகளில் 240 இடங்கள் பெறப்படும்
UPDATED : ஆக 29, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 12:07 PM

புதுச்சேரி:
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இந்தாண்டு 371 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் 3 தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ளன. இக்கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி தலைமையில் அன்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தற்போது எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இறுதி செய்து, அரசு சென்டாக் ஒருங்கிணைப்பாளர் மூலமாக வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லுாரியை பொருத்தவரை மொத்தமுள்ள 180 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளில் 131 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு-27, என்.ஆர்.ஐ., -22 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பிராந்தியத்திற்கு 98 சீட்டுகள், காரைக்கால் 24, ஏனாம் 4, மாகி5 ,எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பிராந்தியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 98 எம்.பி.பி.எஸ்., இடங்கள், பொது 39, இடபுள்யூ.எஸ்.,10, ஓ.பிசி.,11, எம்.பி.சி.,17, எஸ்.சி.,16, மீனவர் 2, முஸ்லீம் 2, எஸ்.டி.,1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 9, மாற்றுதிறனாளி5, விடுதலை போராட்ட வீரர் 4, முன்னாள் ராணுவ வீரர் 1, விளையாட்டு வீரர்1 இடங்கள் உள் ஒதுக்கீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவ கல்லுாரிகளை பொருத்தவரை பிம்ஸ் 57, மணக்குள விநாயகர 92, வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி 91 என மொத்தம் 240 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இந்தாண்டு பெறப்பட்டுள்ளன.
இந்த இடங்கள் பொது 120, ஓ.பி.சி., 27, எம்.பி., 43, எஸ்.சி., 38, மீனவர் 5, முஸ்லீம் 5, எஸ்.டி., 1, பி.டி., 1 என்ற இட ஒதுக்ககீடு அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உள் ஒதுக்கீடாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 24, மாற்றுதிறனாளி12, விடுதலை போராட்ட வீரர் 10, முன்னாள் ராணுவ வீரர் 2, விளையாட்டு வீரர் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக அரசு மருத்துவ கல்லுாரியில் 131, மூன்று தனியார் மருத்துவ கல்லுாரியில் 240 என மொத்தம் 371 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இந்தாண்டு சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 33 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் கிடைக்கும்.