தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செல்வ மகள் திட்டத்தில் 3.88 கோடி கணக்குகள்

செல்வ மகள் திட்டத்தில் 3.88 கோடி கணக்குகள்

செல்வ மகள் திட்டத்தில் 3.88 கோடி கணக்குகள்


UPDATED : ஜூலை 14, 2026 10:16 AM

ADDED : ஜூலை 14, 2026 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 10:16 AM ADDED : ஜூலை 14, 2026 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் வாயிலாக, 3.88 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக, மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

இந்திய தபால் துறை வாயிலாக இது வரை, 14.96 கோடி பேருக்கு, ஆதார் சேர்க்கைகள், திருத்தங்கள் செய்யப்பட்டு, வீட்டிற்கே ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. 2017ல் இருந்து, நாடு முழுதும், 454 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டு, 2.2 கோடி பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளன.

அதே போல், 2018ல் தொடங்கப்பட்ட, 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பாங்க்' வாயிலாக, 12.98 கோடி கணக்குகள், வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே தொடங்கப்பட்டுள்ளன. அதில், 49 சதவீதம் பெண்கள்; 77 சதவீதம் கிராமத்தினர் பயனாளிகளாக உள்ளனர்.

முக்கியமாக, 2015ல் தொடங்கப்பட்ட, 'சுகன்யா சம்ரித்தி' எனும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இது வரை, 3.88 கோடி பெண் குழந்தைகளுக்கு கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கைக்கு உரியதாக ஆக்கியுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us