'குற்றங்களில் சிக்கும் சிறுவர்களை ஆசிரியர்களால் தடுக்க முடியும்'
'குற்றங்களில் சிக்கும் சிறுவர்களை ஆசிரியர்களால் தடுக்க முடியும்'
UPDATED : ஆக 03, 2026 06:24 PM
ADDED : ஆக 03, 2026 06:24 PM
கோவை:
சமீபகாலமாக சிறார் தொடர்பான குற்ற வழக்குகளில், பள்ளி இடைநிற்றல் செய்தவர்கள் அல்லது பள்ளிக்கு தொடர்ந்து செல்லாதவர்கள் இடம்பெறும் சம்பவங்கள், மாநிலம் முழுவதும் அதிகரித்து வருவதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக போதைப்பழக்கம், வன்முறை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் இத்தகைய சிறுவர்கள் சிக்குவது கவலைக்குரியதாக உள்ளது. ஆசிரியர் சுமித்தா சாலினி மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலரிடம் இது பற்றி பேசினோம்.
அவர்கள் கூறியதாவது:
பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, பெற்றோருடன் பேசி தேவையான மனநலம் மற்றும் சமூக ஆதரவை வழங்கினால், பல சிறுவர்கள் குற்றப்பாதையில் செல்வதிலிருந்து தடுக்க முடியும்.
இடைநிற்றல் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இரு நாட்களுக்கு முன் கோவையில் கொலை குற்றத்தில் சிக்கிய மாணவன், பத்தாம் வகுப்புடன் பாதியில் படிப்பை நிறுத்தி வேலைக்கு சென்றுள்ளார். இவருக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர் யாரேனும் ஒருவர் கவனம் செலுத்தி இருந்தால் கூட, இந்த சம்பவம் நடந்து இருக்காது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
