UPDATED : நவ 29, 2026 12:35 PM
ADDED : நவ 29, 2026 12:36 PM
கோவை:
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் சி.ஏ. மாணவர் மாநாடு 2026 நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, வீ த வீடர்ஸ் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை பேசியதாவது:
மாணவர்கள் அறிவு சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமின்றி உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நம் நாடு ஆன்மிகம் சார்ந்த நாடு. அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் ஆன்மிகத்தை பின்பற்றி வருகின்றனர்.
சபரிமலை செல்ல 42 நாள் விரதங்களை தண்டனையாக ஏற்று கொள்கிறோம். இறைவனை நோக்கி முழு மனதோடு நீண்ட பயணம் செய்கிறோம். எத்தனை துன்பங்கள் வந்தாலும் இறைவனை அடைய வேண்டும் என்பதே லட்சியம். வாழ்க்கையிலும் வரும் துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் கல்வி பிரிவு தலைவர் ராஜேஷ் சர்மா, தென்னிந்திய பிரிவின் தலைவர் ஹரிஷ் குமார், துணைத்தலைவர் கிருபா சங்கர், கோவை கிளை தலைவர் தங்கவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
