தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'முதல்வரின் மாநில இளைஞர் விருது' தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

'முதல்வரின் மாநில இளைஞர் விருது' தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

'முதல்வரின் மாநில இளைஞர் விருது' தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 13, 2026 05:15 PM

ADDED : ஜூன் 13, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2026 05:15 PM ADDED : ஜூன் 13, 2026 05:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
சமூக சேவையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், 'முதல்வரின் மாநில இளைஞர் விருது' வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான விருது, வரும் 2027, ஆக., 15 ம் தேதி சுதந்திர தின விழாவின் போது, முதல்வர் கையால் வழங்கப்பட உள்ளது. 2025 - 26 நிதியாண்டு வரையிலான காலத்தில், சேவை செய்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். சமூக நலனுக்காக, தன்னார்வத்துடன் பணி புரிந்திருக்க வேண்டும். அவர்களின் தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர், 2025, ஏப்., 1ம் தேதி, 15 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்; ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை, கல்லுாரிகளில் பணிபுரிவோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

தகுதியுள்ளோர், www.sdat.tn.gov.in என்கிற இணையதளத்தில், வரும் ஜூலை, 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, 0421 2244899 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us