sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி 'சூப்பர் நாக் அவுட்'டில் அசத்திய 3 அணிகள்

'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி 'சூப்பர் நாக் அவுட்'டில் அசத்திய 3 அணிகள்

'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி 'சூப்பர் நாக் அவுட்'டில் அசத்திய 3 அணிகள்


UPDATED : மே 11, 2026 11:39 AM

ADDED : மே 11, 2026 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2026 11:39 AM ADDED : மே 11, 2026 11:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'தினமலர் - பிரீமியர் லீக்' கிரிக்கெட் தொடரில், நேற்று நடந்த 'சூப்பர் நாக் அவுட்' சுற்றில், போர்கைட்ஸ், பென்டாஸ்டிக் மைட்டி ரேஞர்ஸ் உள்ளிட்ட மூன்று அணிகள் வெற்றி பெற்று, லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.

'தினமலர்' நாளிதழ் மற்றும் 'நம்ம பேமிலி குரூப் ' இணைந்து, சென்னையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையிலான டி.பி.எல்., எனும் 'தினமலர் பிரீமியர் லீக்' எனும் டி - 20 சீசன் - 2 கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றன. இதில், 32 நிறுவனங்களை சேர்ந்த அணிகள், 'சூப்பர் நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் மோதி வருகின்றன.

மேடவாக்கம், வைட்பீல்ட் மைதானத்தில் நேற்று நடந்த, 'சூப்பர் நாக் அவுட்' சுற்றில், போர்கைட்ஸ் மற்றும் காங்க்ரூயன்ட் இன்போடெக் அணிகள் மோதின.

'டாஸ்' வென்ற காங்க்ரூயன்ட் இன்போடெக் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த போர்கைட்ஸ் அணி, 19.1 ஓவர்களில் 128 ரன்களில் 'ஆல் அவுட்' ஆனது.

இலக்கை துரத்திய காங்க்ரூயன்ட் இன்போடெக் அணி, கடைசி வரை போராடியும் 20 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. போர்ட்கைட்ஸ் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால் இறுதியில் ஒரு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறித்தனர்.

அதே மைதானத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த எக்ஸ்பெடிட்டர்ஸ் சி.சி., அணி, சைபோ சாமுராய்ஸ் அணி வீரர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 19.3 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

எளிய இலக்குடன் களமிறங்கிய சைபோ சாமுராய்ஸ் அணி, ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டி, 13.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 100 ரன்களை எடுத்து வெற்றியை கைப்பற்றியது.

மற்றொரு போட்டியில், முதலில் களமிறங்கிய பென்டாஸ்டிக் மைட்டி ரேஞ்சர்ஸ் அணி, அதிரடி பேட்டிங்கால், 19.5 ஓவர்களில், ஆல் அவுட் ஆகி, 161 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை துரத்திய என்சோனோ ஸ்டிரைக்கர்ஸ் அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. தொடர்ந்து, அழுத்தம் கொடுத்த ரேஞ்சர்ஸ் பந்து வீச்சாளர்கள் எதிரணியை, 16 ஓவர்களில் வெறும் 73 ரன்களுக்கு சுருட்டி போட்டியை முழுமையாக கைப்பற்றினர்.

இதனால், பென்டாஸ்டிக் மைட்டி ரேஞ்சர்ஸ் அணி, 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மூன்று அணிளும், அடுத்த லீக் சுற்றுகளுக்கு தகுதி பெற்று முன்னேறின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us