sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'புதுப்பொலிவுடன் வருகிறோம்'

'புதுப்பொலிவுடன் வருகிறோம்'

'புதுப்பொலிவுடன் வருகிறோம்'


UPDATED : மே 20, 2026 10:47 AM

ADDED : மே 20, 2026 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2026 10:47 AM ADDED : மே 20, 2026 10:49 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக பங்களிப்பை மையமாகக் கொண்ட எங்கள் கல்வி நிறுவனம் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றத்தை எட்டியுள்ளது. பாடத்திட்ட மேம்பாடு, தொழில்துறை இணைப்பு, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் மாணவர் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் புதிய பாதைக்கு அடித்தளமிட்டுள்ளது.

சந்தைப் போக்குகள் மற்றும் எதிர்காலத் தொழில் வாய்ப்புகள் குறித்த ஆய்வின் பிரதிபலனாக, மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பயிற்சி சார்ந்த மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனம் என்.பி.ஏ., (NBA) அங்கீகாரத்துடன், தன்னாட்சி அந்தஸ்தையும் பெற்றுள்ளது. தற்போது தனது 25வது ஆண்டு பயணத்தை கொண்டாடி வரும் இந்த நிறுவனம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் இலவச கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

மாணவர்களின் தொழில்துறை திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 'இன்னோவேஷன் இன்குபேஷன்' மற்றும் 'சென்டர் ஆப் எக்ஸ்லென்ஸ்' அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு 'புராஜெக்ட்' அடிப்படையிலான கற்றல், உள்ளக பயிற்சி மற்றும் வளாகத்திலிருந்தே பணியாற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், எம்பெடட் சிஸ்டம்ஸ் போன்ற துறைகளில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் உயர்ந்த சம்பளத்துடன் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சான்றிதழ் மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

கல்லூரி வளாகத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, புதிய ஆய்வகங்கள், புத்தாக்க மையம், புதுப்பிக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம், கூடைப்பந்து மைதானம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் சர்வதேச கல்வி வாய்ப்புகளையும் விரிவுபடுத்தும் வகையில், அமெரிக்கா, மலேசியா மற்றும் சிங்கப்பூரிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கு தனிப்பட்ட சர்வதேச விவகாரங்கள் குழு வழிகாட்டுகிறது.

வளாகம் முழுவதும் வைபை வசதி, மேம்பட்ட விடுதி வசதிகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் விளையாட்டு மையங்கள் போன்ற வசதிகள் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஆய்வகங்களை மாலை நேரங்களிலும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு, தொழில்நுட்ப கற்றலுக்கு ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி என்பது வேலைவாய்ப்பை மட்டுமல்ல, சமூக முன்னேற்றத்தையும் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையுடன், மாணவர்கள் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக உருவாக வேண்டும் என்பதே கல்லூரியின் நோக்கம்.
- முகமது சாலிஹ், செயலர், ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்வி நிறுவனங்கள், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us