அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 39 பிஐஎஸ் தரநிலைக் கழகங்கள்
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 39 பிஐஎஸ் தரநிலைக் கழகங்கள்
UPDATED : ஏப் 27, 2024 12:00 AM
ADDED : ஏப் 27, 2024 10:35 AM

சென்னை:
ஐஎஸ்ஐ மார்க், ஹால் மார்க் போன்ற நுகர்வோர் தர கட்டுப்பாடு சான்றிதழ்களை வழங்கும் பிஐஎஸ் தரநிலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் 39 கழகங்கள் இந்திய தர நிர்ணய அமைப்பால் நேற்று துவக்கி வைக்கப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள டிஏஜி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
செய்திக் குறிப்பு:
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கல்வி நிறுவனங்களில் தரநிலை கழகங்களை உருவாக்கும் முயற்சியை பிஐஎஸ் மேற்கொண்டுள்ளது. இந்த கழகங்களின் கீழ், பல்வேறு நடவடிக்கைகள் மூலம், மாணவர்கள் தரம் மற்றும் தரப்படுத்தல் துறையில் கற்கும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அவர்களின் அறிவியல் திறனை ஊக்கப்படுத்தவும், கழகங்களின் வழிகாட்டிகள் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். மேலும் மாணவர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் கல்வி நிறுவனங்களால் இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆர். வேல்ராஜ், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் இயக்குநரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான விக்ரம் கபூர், ஜப்பான் எக்ஸ்டர்னல் ட்ராடா அமைப்பு தலைமை இயக்குநர் கவுரு ஸ்ரீரைஷி, தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் ஜி.எஸ். மகாலட்சுமி, இந்திய தர நிர்ணய அமைப்பின் சென்னை கிளையின் இயக்குநர் மற்றும் தலைவர் விஞ்ஞானி திருமதி ஜி.பவானி, விஞ்ஞானி திரு தினேஷ் ராஜகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.