தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'தினமலர்' பட்டம் வினாடி - வினா போட்டி: மின்னல் வேக பதில்களால் அசத்திய மாணவர்கள்

'தினமலர்' பட்டம் வினாடி - வினா போட்டி: மின்னல் வேக பதில்களால் அசத்திய மாணவர்கள்

'தினமலர்' பட்டம் வினாடி - வினா போட்டி: மின்னல் வேக பதில்களால் அசத்திய மாணவர்கள்


UPDATED : நவ 21, 2026 04:22 AM

ADDED : நவ 21, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 04:22 AM ADDED : நவ 21, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' எனும் மெகா வினாடி - வினா போட்டி கவுண்டம்பாளையம், பிருந்தாவன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் விளாங்குறிச்சி, ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நவ., 20 நடந்தது.

மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தையும், பொது அறிவுத் தேடலையும் ஊக்குவிக்கும் வகையில், 'பட்டம்' இதழில் பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தவும், சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்று வருகின்றன. பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதிலிருந்து தேர்வு செய்யப்படும் எட்டு அணிகள் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுகின்றன. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

பிருந்தாவன் வித்யாலயா


இதன் ஒரு பகுதியாக, கவுண்டம்பாளையம், பிருந்தாவன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றுப் போட்டியில், 41 மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த வாய்மொழி வினாடி-வினா சுற்றில், 'ஏ' அணியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு 'ஏ' பிரிவு சான்சியா மற்றும் எட்டாம் வகுப்பு 'பி' பிரிவு மகா ஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் மேரி பிரீத்தா சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளி


விளாங்குறிச்சி, ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 27 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 'எச்' அணியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு நித்திய ஸ்ரீ மற்றும் ஆறாம் வகுப்பு விஷ்ணு ஆகிய இரு மாணவர்கள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். மாணவர்களுக்கு, முதல்வர் பாஸ்கர் சான்றிதழ்களை வழங்கி ஊக்குவித்தார்.

இப்போட்டிக்கு, சத்யா ஏஜென்சீஸ் நிறுவனம் இணை ஆதரவாளராகவும், ஸ்போர்ட்ஸ் ஹப் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிறுவனமாகவும் கரம் கோர்த்துள்ளது.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us