தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'பட்டம்' வினாடி வினா... மாணவர்களின் அறிவுப் பெட்டகம்!

'பட்டம்' வினாடி வினா... மாணவர்களின் அறிவுப் பெட்டகம்!

'பட்டம்' வினாடி வினா... மாணவர்களின் அறிவுப் பெட்டகம்!


UPDATED : நவ 25, 2026 05:43 PM

ADDED : நவ 25, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 05:43 PM ADDED : நவ 25, 2026 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற மெகா வினாடி- வினா போட்டி, திருப்பூர், செரங்காடு, ஸ்ரீ வள்ளி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் நடந்தது.

பள்ளி மாணவர்களின் கல்வி, சிந்தனைத் திறனை மேம்படுத்தி, வாசிப்பு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், பட்டம் மாணவர் பதிப்பு வெளியிடப்படுகிறது. ஆர்வத்துடன் வாசிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க, வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றன. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 160க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், போட்டியில் பங்கேற்று, பொது அறிவுத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட அளவில், பள்ளிகள் அளவிலான அரையிறுதி சுற்றுக்கான போட்டி நடந்து வருகிறது.திருப்பூர், செரங்காடு, ஸ்ரீ வள்ளி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போட்டி நடந்தது; 52 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவர்கள் எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 8ம் வகுப்பு மாணவர் ஆகாஷ் பிரியதர்ஷன், 6ம் வகுப்பு மாணவர் வருண் கிருஷ்ணராஜ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பள்ளி முதல்வர் மணிகண்டன், துணை முதல்வர் விசாலாட்சி பாலகுரு ஆகியோர் சான்றிதழ் வழங்கினார்.போட்டிக்கு, சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் நிறுவனங்கள் பரிசுப் பொருட்களை வழங்கும் பங்களிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

கனவு மெய்ப்படும்


எனது ஐ.ஏ.எஸ்.,கனவை நனவாக்க 'பட்டம்' இதழ் உதவும் என நம்புகிறேன். போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான வினா விடைகள் மற்றும் பொது அறிவை வளர்க்கும் பல்வேறு தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து படிப்பதன் மூலம் எனது லட்சியம் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

- கவிஷ்குமார், மாணவர்.

ஆர்வத்தை துாண்டுகிறது


அறிவியல் கண்டுபிடிப்புகள், உள்நாடு, உலக நடப்புகள் என அனைத்தையும் 'பட்டம்' இதழில் படிப்பதால் வாசிப்புத் திறன் மேம்படுகிறது. வினாடி -வினா போட்டிகளில் பங்கேற்றதன் வாயிலாக, இன்னும் நிறைய படிக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் துாண்டுகிறது.

- ஆகாஷ் பிரியதர்ஷன், மாணவர்.

தன்னம்பிக்கை வளர்கிறது!


நடப்பு நிகழ்வுகள், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, சுற்றுச்சூழல், வரலாறு மற்றும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களை 'பட்டம்' இதழ் வழங்குகிறது. இதனை வாசிப்பதால், மாணவர்களின் சொல் வளம், பொது அறிவு, வாசிப்புத் திறன் மற்றும் தன்னம்பிக்கை வளர்கிறது. உலக நடப்புகளை புரிந்துகொள்ள, புதுமையாக சிந்தித்து கேள்விகள் கேட்கவும் இது உதவுகிறது. மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களின் பொது அறிவாற்றலை மேலும் விசாலமாக்கவும் 'தினமலர் - பட்டம்' இதழ் துணை நிற்கிறது.

- விசாலாட்சி பாலகுரு பள்ளி துணை முதல்வர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us